TNPSC Thervupettagam

மும்மைய அச்சுறுத்தல் அறிக்கை

April 1 , 2023 604 days 290 0
  • UNICEF அமைப்பின் "மும்மைய அச்சுறுத்தல்" அறிக்கையானது, பற்றாக்குறையானத் தண்ணீர், துப்புரவு மற்றும் சுகாதாரம் (WASH) போன்ற தண்ணீர் தொடர்பான மூன்று அச்சுறுத்தல்களைப் பற்றி விவாதிக்கிறது.
  • உலகளவில், 600 மில்லியன் குழந்தைகளுக்கு இன்னும் பாதுகாப்பான முறையில் வழங்கப் படும் குடிநீர் கிடைக்கப் பெறவில்லை.
  • 1.1 பில்லியன் மக்களுக்குப் பாதுகாப்பான முறையில் வழங்கப்படும் துப்புரவு சேவை கிடைக்கப் பெறவில்லை என்பதோடு, 689 மில்லியன் மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் கிடைக்கப் பெறவில்லை.
  • 149 மில்லியன் குழந்தைகள் இன்னும் திறந்த வெளியில் மலம் கழித்தல் மற்றும் பாதுகாப்பற்ற குடிநீர் குடித்தல் போன்ற அவலநிலையினை எதிர்கொள்கின்றனர்.
  • 190 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளைக் கொண்ட பத்து நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதியில் உள்ள நாடுகள் இந்த மும்மை சுமையை எதிர்கொள்கின்றன.
  • பாதுகாப்பற்றத் தண்ணீர், துப்புரவு மற்றும் சுகாதார நிலையினால் ஏற்படும் 5 இறப்புகளில் 2 இறப்புகள் இந்த நாடுகளில் பதிவாகியுள்ளன.
  • உலகளவில், 2000 ஆம் ஆண்டில் 82 சதவீதமாக இருந்த, அடிப்படைக் குடிநீர் வசதியினை அணுகக் கூடிய வகையில் உள்ள குடும்பங்களின் சதவீதமானது 2020 ஆம் ஆண்டில் 90% ஆக உயர்ந்துள்ளது.
  • உலகளவில், 2000 ஆம் ஆண்டில் 56% ஆக இருந்த அடிப்படை சுகாதார வசதிகளுக்கான அணுகலைக் கொண்ட வீடுகளானது 2020 ஆம் ஆண்டில் 78% ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்