TNPSC Thervupettagam

முர்ரே கெல் மேன்

May 30 , 2019 1877 days 761 0
  • 1969 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற இயற்பியல் வல்லுநரான முர்ரே கெல் மேன் என்பவர் அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோவில் காலமானார். அவருடைய வயது 89 ஆகும்.
  • இவர் அணுவகத் துகள்களின் சுழலும் தன்மை, மின் தன்மை மற்றும் இதர பண்புகளை அடிப்படையாகக் கொண்டு அணுவகத் துகள்களை 8 எளிமையான குழுக்களாக வகைப்படுத்துவதற்கான ஒரு முறையைக் கண்டறிந்தார்.
  • அறிவொளியைப் பெறுவதற்கான புத்தரின் எண்வழிப் பாதைகளின் நினைவாக, இவர் இந்த முறைக்கு “எண் வழிகள்” என்று பெயரிட்டார்.
  • இயற்பியல் முறையில் பிரபஞ்சம் குறித்த நமது புரிதலுக்கு ஒரு அடிப்படையை உருவாக்கும் ‘குவார்க்ஸ்’ என்ற கோட்பாட்டை உருவாக்கிய முதலாவது அறிவியலாளர் இவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்