TNPSC Thervupettagam

முழுமையான கன்னட மொழி மேம்பாட்டு மசோதா

October 2 , 2022 658 days 353 0
  • இந்த மசோதா கர்நாடக அரசு வேலைகளில் கன்னட மொழியினருக்கு முன்னுரிமை அளிப்பதோடு அம்மாநிலத்தில் உருவாக்கப்படும் தனியார் வேலைகளில் உள்ளூர் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவும் செய்கிறது.
  • கன்னட மொழியினைப் படிக்கவும் எழுதவும் தெரிந்த, குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் கர்நாடகாவில் வசிக்கும் பெற்றோர்களைக் கொண்ட தனிநபர்களை இந்த மசோதா  கன்னட மொழியினர் என வரையறுக்கிறது.
  • இந்த மசோதாவின் கீழ், உயர்தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறைக் கல்வி போன்ற படிப்புகளில் கன்னட மொழியின் நடைமுறை மற்றும் செயல்பாட்டு அறிவு கற்பிக்கப் படும்.
  • அங்கு கன்னட மொழியினை முதன்மையாகக் கொண்டுள்ளப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் இடஒதுக்கீடு வழங்கப்படும்.
  • அங்கு குறைந்தபட்ச அளவு கூட கன்னட மொழியினரைப் பணியமர்த்தாத தனியார் நிறுவனங்களுக்கு நிலச்சலுகை, வரிச்சலுகை மற்றும் பிற சலுகைகள் போன்றவை  மறுக்கப்படும் என இந்த மசோதா கூறுகிறது.
  • கன்னட மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அம்மாநிலத்தில் அரசு வேலைகள் வழங்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்