TNPSC Thervupettagam

முழுமையான செயல்பாட்டுக் கல்வியறிவு பெற்ற முதல் மாவட்டம்

August 21 , 2022 700 days 626 0
  • மத்தியப் பிரதேசத்தின் ​​மாண்ட்லா மாவட்டம் முழுமையான செயல்பாட்டுக் "கல்வி அறிவு" பெற்ற இந்தியாவின் முதல் மாவட்டமாக மாறியுள்ளது.
  • 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் போது, ​​மாண்ட்லா மாவட்டத்தில் கல்வியறிவு விகிதம் 68% ஆக இருந்தது.
  • 2020 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மற்றொரு அறிக்கை, இந்த மாவட்டத்தில் 2.25 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கல்வியறிவு இல்லாதவர்கள் என்றும், அவர்களில் பெரும்பாலோர் வனப் பகுதிகளைச் சேர்ந்தப் பழங்குடியினர் என்றும் கூறுகிறது.
  • தற்பொழுது அங்குள்ள அனைத்து மக்களும் தங்கள் பெயர்களை எழுதவும், எண்களை எண்ணவும், படிக்கவும் முடியும் என்று அந்த மாவட்டத்தின் ஆட்சியர் கூறுகிறார்.
  • ஒரு நபர் தனது சொந்தப் பெயரை ஏதேனும் ஒரு மொழியில் எழுதவும், எண்களை எண்ணவும் படிக்கவும் எழுதவும் முடியும் போது அவர் /அவள் முழுமையான அளவில்  கல்வியறிவு பெற்றவர் என்று அழைக்கப்படுவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்