மனித மரபணுத் திட்டம் ஆனது 2003 ஆம் ஆண்டில் முதல் முறையாக முழு மனித மரபணுத் தொகுப்பினை நிறைவு செய்ததாக அறிவித்துள்ளது.
முதன்முறையாக, மனித உயிரினத்தின் DNA உருவ வரைபடமும் வெளியிடப்பட்டது.
ஆனால் அவர்களால் உண்மையில் மரபணுவில் உள்ள அனைத்து மரபணுத் தகவல்களையும் ஒன்றாக இணைக்க முடியவில்லை.
இதில் இடைவெளிகள் இருந்தன: அவை நிரப்பப்படாத, அடிக்கடி மீண்டும் மீண்டும் வரக் கூடிய தொடர் பகுதிகள் ஒன்றாக இணைக்க முடியாத அளவுக்கு குழப்பமாக இருந்தன.
இந்தத் தொடர்களை கையாளக் கூடிய அளவிலான தொழில்நுட்பத்தில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டதன் மூலம், அறிவியலாளர்கள் இறுதியாக 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் அந்த இடைவெளிகளை நிரப்பினர்.
முதலாவது மனித மரபணுவானது, 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியன்று அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு, முதன்முறையாக, லியோன் பெஷ்கின் என்ற ஒரு தனி மனிதனின் முழு மரபணு வெளியிடப்பட உள்ளது.