TNPSC Thervupettagam
April 10 , 2024 229 days 260 0
  • வட அமெரிக்காவில் ஏற்பட்ட முழு சூரிய கிரகணம் ஆனது மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் தென்பட்டது.
  • பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் நிலவு நகரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
  • நிலவு ஆனது சூரியனின் ஒளியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கும்போது உலகின் சில பகுதிகளில் பெரும் நிழலை ஏற்படுத்துகிறது.
  • முழு சூரிய கிரகணம், வருடாந்திர சூரிய கிரகணம், பகுதியளவு சூரிய கிரகணம் மற்றும் கலப்பு சூரிய கிரகணம் உட்பட நான்கு வெவ்வேறு வகையான சூரிய கிரகணங்கள் உள்ளன.
  • நிலவானது சூரிய ஒளியை முழுவதுமாக மறைக்கும் போது, அந்த நேரத்தில் நிலவின் நிழலின் மையத்தில் உள்ள பகுதிகள் முழு சூரிய கிரகணத்திற்கு உள்ளாகின்றன.
  • பூமியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடம் ஆனது 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே முழு சூரிய கிரகணத்தைக் காண்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்