TNPSC Thervupettagam

முஸ்லிம் பெண்கள் உரிமை தினம் – ஆகஸ்ட் 01

August 2 , 2023 483 days 219 0
  • 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த முத்தலாக் முறைக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டத் தினத்தினைக் குறிக்கிறது.
  • 2021 ஆம் ஆண்டில் முதன்முறையாக முஸ்லீம் பெண்கள் உரிமைகள் தினம் என்பது கொண்டாடப் பட்டது.
  • முத்தலாக் முறைக்கு எதிரான இந்தச் சட்டமானது, விவாகரத்து விதிமுறைகளில் அவர்களுக்கு இழைக்கப் பட்ட கொடுமைகளில் இருந்து அவர்களை விடுவித்தது.
  • முத்தலாக் என்பது தலாக்-இ-பித்தத் என்றும் அழைக்கப் படுகிறது.
  • இஸ்லாமிய சமயத்தில் நடைமுறையில் உள்ள ஒரு விவாகரத்து முறையான இதில் ஒரு ஆண் மூன்று முறை தலாக் என்று உச்சரித்து தனது மனைவியை அவர் விவாகரத்து செய்யலாம்.
  • மேலும், தலாக் உச்சரிக்கும் நேரத்தில் விவாகரத்திற்கான எந்த ஒரு காரணத்தையும் ஒருவர் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.
  • தலாக் உச்சரிக்கப்படும் இடத்தில் மனைவி இருக்க வேண்டிய அவசியமுமில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்