TNPSC Thervupettagam

மூத்தப் புகைப்படக் கலைஞர் K. ஜெயராம்

July 4 , 2023 383 days 241 0
  • இந்தியாவில் மேக்ரோ (பேரளவு) புகைப்படக் கலையில் முன்னோடியாகக் கருதப் படும் புகழ்பெற்ற இயற்கை புகைப்படக் கலைஞர் K. ஜெயராம் சமீபத்தில் காலமானார்.
  • அவர் 1963 ஆம் ஆண்டு புகைப்படம் எடுத்தல் போட்டியில், நெகிழியினால் செய்யப்பட்ட அக்ஃபா கிளிக்-III என்ற தனது முதல் பரிசை வென்றார்.
  • அவர் 1970 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒரு சர்வதேச புகைப்படக் கலைஞர் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.
  • ஜெயராம் 1978 ஆம் ஆண்டில் ஐக்கியப் பேரரசின் ராயல் புகைப்படவியல் சமூகத்தின் இணை உறுப்பினர் ஆனார்.
  • 1983 ஆம் ஆண்டில் ஐரோப்பாவின் புகைப்படக் கலைக்கானச் சர்வதேசக் கூட்டமைப்புச் சார்பாக (EFIAP) அவருக்குச் சிறப்பு விருது ஒன்று வழங்கப்பட்டது.
  • அதைத் தொடர்ந்து 1986 ஆம் ஆண்டில் மாஸ்டர் ஹானர் EFIAP என்ற விருது வழங்கப் பட்டது.
  • அவர் சில தென்னிந்திய வண்ணத்துப் பூச்சிகள் பற்றிய புத்தகம் மற்றும் அமைதிப் பள்ளத்தாக்குப் பற்றிய மற்றொருப் புத்தகத்தின் இணை ஆசிரியர் ஆவார்.
  • தவளை ராவ்செஸ்டேஸ் ஜெயராமி மற்றும் சிலந்தி மைர்மராச்னே ஆகிய இரு உயிர் இனங்களுக்கு அவரது பெயரால் பெயரிடப் பட்டுள்ளது.
  • ‘Insects to Infinity’ என்பது ஜெயராம் மற்றும் அவரது படைப்புகள் பற்றிய ஆவணப் படம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்