TNPSC Thervupettagam

மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள்

February 20 , 2019 1978 days 570 0
  • பீகார் அரசின் தற்போதைய ஓய்வூதியத் திட்டமானது வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும்.
  • இந்த சூழ்நிலையில், அனைத்து மூத்த குடிமக்களையும் உள்ளடக்குவதற்காக பின்வரும் புதிய ஓய்வூதியத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
  • முக்கிய மந்திரி விரிதாஜன் ஓய்வூதியத் திட்டம் – MVPY (Mukhyamantri Vridhajan Pension Yojna)
    • 60 வயதைக் கடந்த அனைவருக்குமான முக்கிய மந்திரி விரிதாஜன் ஓய்வூதியத் திட்டம் – MVPY என்ற மாநிலம் தழுவிய புதிய ஓய்வூதியத் திட்டத்தை பீகார் முதல்வர் அறிவித்துள்ளார்.
    • இத்திட்டத்தின் மூலம், அரசாங்கப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களைத் தவிர சாதி, மதம் மற்றும் சமூகம் என்ற வேறுபாடில்லாமல் அனைவரும் மாத ஓய்வூதியமாக 400 ரூபாயைப் பெறத் தகுதியுடையவர்களாவர்.
  • பீகார் பட்ராகர் சம்மன் யோஜனா (BPSY - Bihar Patrakar Samman Yojana)
    • மேலும் பீகார் மாநில முதல்வர் 60 வயதிற்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கும் 6000 ரூபாயை மாத ஓய்வூதியமாக அறிவித்துள்ளார்.
    • ஊடகத் துறையில் தொடர்ந்து பணியாற்றும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் எந்தவொரு ஓய்வூதியத்தையும் பெறாத பத்திரிக்கையாளர்கள் அனைவரும் பீகார் பட்ராகர் சம்மன் யோஜனா என்ற திட்டத்திற்குத் தகுதியுடையவர்களாவர்.
  • இந்த இரு திட்டங்களும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படவிருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்