TNPSC Thervupettagam

மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா

May 8 , 2023 440 days 219 0
  • மே 6 ஆம் தேதியன்று, இங்கிலாந்தின் லண்டனில் வெஸ்ட் மினிஸ்டர் அபேய் என்ற மாளிகையில் மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு நாற்பதாவது அரச ஆட்சியாளராக முடி சூட்டப் பட்டதோடு, அரசி கன்சார்ட் கமிலா அவர்களுக்கும் முடிசூட்டப்பட்டது.
  • இது கோல்டன் ஆர்ப் நடவடிக்கை என்றும் அழைக்கப் படுகின்றது.
  • இந்த முடிசூட்டுச் விழாவானது 1953 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாகவும், 1937 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒரு மன்னருக்கு நடைபெறும் முதல் விழாவும் ஆகும்.
  • 70 வருடங்களுக்கு முன், 1953 ஆம் ஆண்டில் அவரது தாயாரான இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டுச் விழாவானது நடத்தப் பட்டது.
  • 1937 ஆம் ஆண்டில் மன்னர் ஆறாம் ஜார்ஜ் என்பவரின் முடிசூட்டுச் விழாவானது நடத்தப் பட்டது.
  • முதன்முறையாக, ஐக்கியப் பேரரசின் பிரதமரும், தெற்காசிய நபரும், இந்து சமயத்தைச் சேர்ந்த ஒருவருமான ரிஷி சுனக், வேதாகமத்தில் உள்ள வாசகத்தினைப் படித்தார்.
  • தெற்காசிய மற்றும் முஸ்லீம் பிரித்தானியரான ஸ்காட்லாந்து நாட்டின் பிரதான அமைச்சர் ஹம்சா யூசுப், அந்நாட்டின் பாரம்பரிய உடையான கில்ட்டினை அணிந்து இருந்தார்.
  • ஒரு வெல்ஷ் பாடலுடன் விழா தொடங்கப்பட்ட இந்த விழாவில் ஒரு கருப்பின நன்னூல் பாடகர் மற்றும் பெண் பேராயர் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்