TNPSC Thervupettagam

மூன்றாம் தரப்புப் பரிவர்த்தனை மாதிரி

June 1 , 2024 47 days 146 0
  • நான்கு ஐரோப்பிய வங்கிகள் மூன்றாம் தரப்புப் பரிவர்த்தனை மாதிரியை அங்கீகரிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கியிடம் (RBI) கோரிக்கை விடுத்துள்ளன.
  • கிரெடிட் அக்ரிகோல், சொசைட்டி ஜெனரல், டாய்ச் வங்கி மற்றும் BNP பரிபாஸ் ஆகிய நிறுவனங்கள் தணிக்கை மேற்பார்வை உரிமைகள் தொடர்பாக தங்கள் நிறுவன அதிகாரிகளுக்கும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையே உள்ள பல தடைகளைத் தீர்க்க முயல்கின்றன.
  • 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், ஐரோப்பியப் பங்குகள் மற்றும் சந்தை ஆணையம் (ESMA) ஆனது இந்தியப் பங்கு வெளியீட்டுக் கழகத்தின் (CCIL) அங்கீகரித்ததை நீக்கியதிலிருந்து இந்திய அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் பல்வேறு வகையீடுகளை வர்த்தகம் செய்வதில் ஐரோப்பிய வங்கிகள் பெரும் தடைகளை எதிர் கொள்கின்றன.
  • CCIL மீதான தணிக்கை மற்றும் ஆய்வு உரிமைகளை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி மறுத்ததன் விளைவாக ESMA ஆணையத்தின் முடிவு மேற்கொள்ளப்பட்டது.
  • இந்த உரிமைகள் உள்நாட்டு அரசாங்கப் பத்திர வர்த்தகத்தை மேற்பார்வையிடச் செய்வதோடு, அதற்கான தீர்வுகளை உறுதிப்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்