இந்தியக் காப்பீட்டு ஒழுங்முறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது சுகாதார சேவைக்கான காப்பீடுகளின் மூன்றாம் தரப்பு நிர்வாக நிறுவனங்களை நிர்வகிக்கும் விதிமுறைகளில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
காப்பீட்டு நிறுவனம் மற்றும் பாலிசிதாரருக்கு இடையில் ஒரு இடைத் தரகராக இந்த நிர்வாக நிறுவனங்கள் செயல்படுகின்றன.
காப்பீட்டு உரிமைக் கோரல்களையும் இவை கையாள்கின்றன.
புதிய விதிமுறைகளானது பாலிசிதாரர்கள் தங்களுக்கு விருப்பமான நிர்வாக நிறுவனங்களைத் தேர்வு செய்ய அனுமதியளிக்கின்றது.