இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடையே கூட்டாண்மையை ஏற்படுத்துவதற்காக இந்தியா தனது மூன்றாவது தகவல் தொழில்நுட்பப் பெருவழிப்பாதையை சீனாவில் தொடங்கியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப பெருவழிப்பாதையை மேம்படுத்துவதற்கு உதவுவதற்காக தேசிய மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் மன்றமானது (National Association of Software and Services Companies - NASSCOM) சீனாவின் ஜியான்ங்சு மாகாணத்தின் சுகோ நகரத்துடன் ஒரு கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பெருவழிப் பாதையானது இந்திய நிறுவனங்கள் சீன நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
இதற்கு முன்பு டாலியன் மற்றும் கியூயாங் ஆகிய இரு நகரங்களில் இந்தப் பெருவழிப் பாதைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.