காப்பீட்டு ஒழுங்குமுறை அமைப்பான ஐஆர்டிஏஐ (IRDAI - Insurance Regulatory and Development Authority of India) ஆனது மகிழுந்துகள், இரு சக்கர வாகனங்கள், பள்ளிப் பேருந்துகள் மற்றும் சரக்குந்துகள் ஆகியவற்றிற்கான மூன்றாம் நபருக்கான வாகன காப்புறுதித் தொகையை அதிகரிப்பதற்குப் பரிந்துரைத்துள்ளது.
வாகனக் காப்பீட்டுக் கொள்கையானது முக்கியமான இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது. அவையாவன
மூன்றாம் நபர் பொறுப்பு
சொந்தச் சேதங்கள்
சேதங்களிலிருந்து ஏற்படும் கடன்கள் மூன்றாம் நபருக்குப் பாதிப்பை ஏற்படுத்தினால், அவை மூன்றாம் நபர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ளடங்கும்.
இது வாகனங்களின் சேதம் மற்றும் அவற்றின் உரிமையாளர் ஆகியோரை உள்ளடக்காது.