TNPSC Thervupettagam

மூன்றாவது நீண்டப் பருவமழை இடைவேளை

August 22 , 2023 333 days 205 0
  • 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 07 ஆம் தேதியன்று தொடங்கிய தற்போதையப் பருவமழை இடைவேளையானது இறுதியாக ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று முடிவடைந்தது.
  • தற்போதையப் பருவமழை இடைவேளையானது 2002 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட இந்த நூற்றாண்டின் மூன்றாவது நீண்டப் பருவமழை இடைவேளையாக கருதப் படுகிறது.
  • பருவமழை இடைவேளை என்பது பருவமழைக் காற்று மண்டலம் வடக்கு நோக்கி நகரும் போது ஏற்படும்.
  • இது இமயமலை அடிவாரங்கள் மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் மழைப் பொழிவை அதிகரிக்கிற அதே நேரத்தில் இது நாட்டின் மற்ற பகுதிகளில் மழைப் பொழிவினை மட்டுப்படுத்துகிறது.
  • இது குறிப்பாக மையப் பருவமழை மண்டலப் பகுதி அல்லது மேற்கில் குஜராத்தில் இருந்து கிழக்கில் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா வரை நீண்டு காணப்படும் பகுதியில் நிகழ்கிறது.
  • கடந்த 73 ஆண்டுகளில், 10 நாட்களுக்கு மேல் இந்த இடைவேளை நீட்டிக்கப் பட்டதாக 10 நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.
  • 1972 ஆம் ஆண்டில் (17 நாட்கள்) மிக நீண்டத் தொடர்ச்சியான ஒரு இடைவேளையானது பதிவானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்