மெர்கோம் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, சீனா மற்றும் அமெரிக்காவிற்குப் பிறகு 2017ஆம் ஆண்டில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய சூரியஒளி சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது.
மெர்கோம் கம்யூனிகேசன்ஸ் இந்தியா நிறுவனமானது, உலகளாவிய தூய ஆற்றலுக்கான ஆலோசனை நிறுவனமான மெர்கோம் கேபிடல் குழுமத்தின் ஒரு கிளை நிறுவனமாகும்.
2010லிருந்து தோராயமாக 170% அளவிற்கு வருடாந்திர கூட்டு வளர்ச்சி விகிதத்தைக் கொண்டு இந்திய சூரியஒளி சந்தை வளர்ச்சியைக் கண்டுள்ளது.
இந்த வலுவான வளர்ச்சியானது, 2017 டிசம்பர் வரையில் இந்தியாவின் மொத்த சூரியஒளித் தகடுகளை நிறுவுதல் திறனை (Capacity) 19.6 GW அளவிற்கு உயர்த்தியுள்ளது.