மத்திய அரசானது மாநில அரசுகளுக்கான 1.18 டிரில்லியன் வரிப் பகிர்வின் மூன்றாவது தவணையை வழங்கியது.
இது சாதாரண மாதாந்திரப் பகிர்மானமான ரூ.59,140 கோடியை விட சற்று அதிகமாகும்.
மத்திய அரசின் வரிகள் மற்றும் கட்டணங்களின் மீதான நிகர வருமானமானது உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு ரூ.21,218 கோடி, தமிழக மாநிலத்திற்கு ரூ.4,825 கோடி, தெலுங்கானா மாநிலத்திற்கு ரூ.2,486 கோடி மற்றும் பீகார் மாநிலத்திற்கு ரூ.11,897 என அனைத்து மாநிலங்களுக்கும் பகிரப் படுகிறது.