தமிழ்நாட்டின் முதன்மையான தகவல் தொழில்நுட்ப மாநாடு ஆனது, 'செயற்கை நுண்ணறிவு மற்றும் மாறுதல் மிக்கத் தொழில்நுட்பம் மூலம் சமமான வளர்ச்சியை தூண்டுதல்' என்ற கருத்துருவின் கீழ் நடைபெற்றது.
இந்த இரண்டு நாட்கள் அளவிலான மாநாடு ஆனது, தொழில்நுட்பமும் புதுமையும் எவ்வாறு பிரகாசமான, சமமான எதிர்காலத்தினை வடிவமைக்க முடியும் என்பதை வெளிப்படுத்துவதற்காகவும் ஆராய்வதற்காகவும் வேண்டி உலகின் மிக முன்னணிச் சிந்தனையாளர்களை ஒன்று திரட்டியது.
UmagineTN என்பது தமிழ்நாடு மாநிலத்தினை, டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான அதன் இலக்கினை நோக்கி நகர்த்தும் ஒரு பரிணமித்து வரும் தளமாக உள்ளது.