மூன்று புதிய விலாங்கு இனங்கள் வங்காள விரிகுடாவில் கண்டுபிடிப்பு
February 13 , 2018 2620 days 999 0
கடந்த சில மாதங்களில், வங்கக் கடற்கரையின் வடக்கு விரிகுடாப் பகுதியில் மூன்று புதிய வகை விலாங்கு இனங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
வங்காள விரிகுடாவின் டிகா (Digha) கடற்கரையில் (மேற்கு வங்கம்) ஜிம்னோதொராக்ஸ் சூடோடைல் (Gymnothorax Pscudotile) என்ற இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (பின்புறத்தில் வெண் புள்ளிகளைக் கொண்ட இருண்ட பழுப்பு நிறம் உடையது)
மற்ற இரண்டு இனங்களான ஜிம்னோதோராக்ஸ் விசாகேன்சிஸ் (சீரான பழுப்பு நிறம்) மற்றும் என்செலிக்கோர் புரோபின்குவா (சீரற்ற பால் வெள்ளைப் புள்ளிகளைக் கொண்ட செம்பழுப்பு நிறம்) வங்காள விரிகுடாவின் விசாகப்பட்டினக் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விலாங்குகளானது நீளமான மீன்களாகும். இது பெரும்பாலும் அங்கில்லிபோம்ஸ் (Anguilliformes) வகையைச் சேர்ந்த கொன்றுன்னிகளாகும். இவை பெரும்பாலும் ஆறுகள் மற்றும் கடலுக்கு அடியில் காணப்படுகின்றன.
உலகம் முழுவதும் சுமார் 1000 இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தியாவில் இந்த எண்ணிக்கை 125 ஆகும்.