மதராஸ் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்ட பிறகு, இந்திய நீதித்துறை வரலாற்றில் உச்சநீதிமன்றம் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
முதல் முறையாக உச்சநீதிமன்றம் மூன்று பெண் நீதிபதிகளை கொண்டிருக்கும். அவர்களாவன
நீதிபதி R.பானுமதி
நீதிபதி இந்து மல்ஹோத்ரா
நீதிபதி இந்திரா பானர்ஜி
இந்தியக் குடியரசுத் தலைவர் சமீபத்தில் நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒரிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வினீத் சரண் மற்றும் உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி K.M.ஜோசப் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்தார்.
நீதிபதி இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற வரலாற்றில் எட்டாவது பெண் நீதிபதியாவார்.
இவர் பின்வருபவர்களை தொடர்ந்து பதவியேற்கிறார்.
பாத்திமா பீவி
சுஜாதா வி மனோகர்
ருமா பால்
கியான் சுதா மிஸ்ரா
ரஞ்சனா பிரகாஷ் தேசாய்
தற்சமயம் இந்திய உச்சநீதிமன்றம் 22 நீதிபதிகளைக் கொண்டுள்ளது.
நீதிபதி கீதா மிட்டல் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக வரலாறு படைத்துள்ளார்.
சிந்து சர்மா அம்மாநில உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற சிறப்பை பெற்றிருக்கின்றார்.