- நாட்டின் கோவிட் – 19 நோய்த் தொற்றின் பாதிப்புகளைக் கையாளுவதற்காக மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நல அமைப்புகள் வகைப்படுத்தப் பட்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
- ஒருவர் சமூகப் விலகல் வழிகாட்டுதல்களை மிகக் கடுமையாகப் பின்பற்றவில்லையெனில் அவர் 3 நாட்களில் 406 மக்களுக்கு நோய்த் தொற்றை ஏற்படுத்துவார் என்று இந்த அமைச்கம் அறிவித்துள்ளது.
- நாட்டில் 3 வகையான கோவிட் – 19 சுகாதார நல மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன.
- இந்த 3 வகைகள் பின்வருமாறு:
- கோவிட் நல மையம்
- பிரத்தியேக கோவிட் சுகாதார மையம்
- பிரத்தியேக கோவிட் மருத்துவமனை
கோவிட் நல மையம்
- இந்த மையமானது மிகவும் குறைவான பாதிப்புக்கு உள்ளானவர்களைக் கையாள இருக்கின்றது.
- இவை விடுதிகள், அரங்குகள், பள்ளிகள், தங்கும் விடுதிகள் போன்றவையாகக் கூட இருக்கலாம்.
பிரத்தியேக கோவிட் சுகாதார நல மையம்
- இந்த மையங்கள் மிதமான பாதிப்பிற்கு உள்ளான நபர்களைக் கையாள இருக்கின்றது.
- இந்த மையங்கள் அதன் அனைத்துப் படுக்கைகளிலும் கண்டிப்பாக ஆக்ஸிஜன் உபகரணத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
- மேலும், இந்த மையங்கள் போதுமான ஆக்ஸிஜன் உபகரணத்துடன் பிரத்தியேக அவசர கால ஊர்தியைக் கொண்டிருக்க வேண்டும்.
பிரத்தியேக கோவிட் மருத்துமனை
- இந்த மருத்துவமனை “மிகவும் கடுமையான” பாதிப்பிற்கு உள்ளான நபர்களைக் கையாளுகின்றது.
- இவை முற்றிலும் மருத்துவமனையாகவோ அல்லது மருத்துவமனையின் ஒரு பகுதியாகவோ இருக்கலாம்.
- தனியார் மருத்துவமனைகளும் இந்த வகையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
- இந்த மருத்துவமனைகள் தீவிர சிகிச்சைப்பிரிவு, ஆக்ஸிஜன் உபகரணத்துடன் கூடிய படுக்கை வசதி மற்றும் சுவாச உபகரணங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.