TNPSC Thervupettagam
October 23 , 2024 6 days 95 0
  • சர்வதேச விண்வெளி மாநாட்டில் ஐரோப்பிய விண்வெளி முகமையானது (ESA), அதன் மூன்லைட் சந்திர தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து சேவை (LCNS) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • அடுத்த 20 ஆண்டுகளில் விண்வெளி முகமைகள் மற்றும் தனியார் நிறுவனங்களால் திட்டமிடப்பட்ட 400க்கும் மேற்பட்ட நிலவு ஆய்வுப் பயணங்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டமானது துல்லியமான சுயக் கட்டுப்பாட்டுடன் கூடிய தரையிறக்கம், அதிவேக தகவல் தொடர்பு மற்றும் மேற்பரப்பு இயக்கம் ஆகியவற்றிற்கு வழி வகுக்கும் சுமார் ஐந்து நிலவு ஆய்வு செயற்கைக்கோள்களின் தொகுப்பைக் கொண்டிருக்கும்.
  • இந்த செயற்கைக்கோள்கள் பூமிக்கும் நிலவிற்கும் இடையே 2,50,000 மைல்கள் அல்லது 4,00,000 கிலோமீட்டர்களுக்கு மேலான பகுதிகளில் தரவு பரிமாற்றத்தை நன்கு செயல் படுத்தும் என்று கூறப்படுகிறது.
  • ஐரோப்பா, தனது ஆர்கோனாட் விண்கலத்தினை 2031 ஆம் ஆண்டில் நிலவில் தரை இறக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்