TNPSC Thervupettagam

மூன் ஸ்னைப்பர் – ஜப்பான்

September 10 , 2023 314 days 212 0
  • ஜப்பான் நாட்டின் முதலாவது வெற்றிகரமான நிலவு தரையிறங்கு விண்கலமாக மாற பெற உள்ள விண்கலத்தினைச் சுமந்து செல்லும் ஏவுகலம் விண்ணில் ஏவப்பட்டது.
  • நிலவில் ஒரு விண்கலத்தினைத் தரையிறக்கிய உலகின் ஐந்தாவது நாடு என்ற ஒரு பெருமையினைப் பெறும் முயற்சியாக இது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • இந்த நிலவு தரையிறங்கு விண்கலமானது நிலவினை ஆய்வு செய்வதற்கான திறன் மிகு தரையிறங்கு விண்கலம் (SLIM) என அதிகாரப் பூர்வமாக அறியப்படுகிறது.
  • இது "மூன் ஸ்னைப்பர்" என்றும் குறிப்பிடப் படுகிறது.
  • SLIM விண்கலம் ஆனது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • இது நீண்ட கால, ஆனால் அதிக எரிபொருள் திறன் கொண்ட ஒரு சுற்றுப்பாதையை தேர்ந்தெடுத்துப் பயணிக்கும்.
  • நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து உருவாக்கிய ஆராய்ச்சி செயற்கைக் கோளையும் இந்த ஏவுகலம் சுமந்து செல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்