TNPSC Thervupettagam

மூலதன முதலீட்டிற்காக மாநிலங்களுக்குச் சிறப்பு நிதி உதவி

December 13 , 2024 16 days 41 0
  • மத்திய அரசானது தனது மூலதன முதலீட்டிற்கானச் சிறப்பு நிதி உதவி திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு 50,571.42 கோடி ரூபாய் நிதியை வழங்கியுள்ளது.
  • இது நடப்பு நிதியாண்டின் முதலாவது எட்டு மாதங்களில் பல்வேறு நல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • 28 மாநிலங்களில் அருணாச்சலப் பிரதேசம், ஹரியானா, கேரளா, பஞ்சாப் மற்றும் தெலுங்கானா ஆகியவை தவிர்த்து மற்ற 23 மாநிலங்கள், மத்திய அரசின் வட்டியில்லா நிதி உதவியைப் பெற்றுள்ளன.
  • இந்தத் திட்டம் ஆனது மூலதனச் செலவினங்களை அதிகரிப்பதற்காக வேண்டி மாநில அரசுகளுக்கு 50 ஆண்டு கால வட்டியில்லாக் கடன்களை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்