அறிவியலாளர்கள் ‘கம்பியில்லா குளறுபடியற்ற நரம்பு செயல்பாடு மாற்றக் கருவி’ (Wireless artifact-free neuromodulation device- WAND) எனும் பெயரிடப்பட்ட வலிப்பு மற்றும் பர்கின்சன் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.
இது மூளையின் மின்செயல்பாட்டைக் கண்காணிக்கவும், மூளையின் மின்னோட்டத்தைத் தூண்டுவதற்காகவும் மூளைக்கான பேஸ்மேக்கர் கருவியைப் போன்று செயல்படுகிறது..
இந்த சாதனமானது கம்பியில்லாத மற்றும் தன்னிச்சையாக செயல்படக் கூடியது ஆகும். மேலும் ஒரே நேரத்தில் இது மின்னோட்டத்தினைத் தூண்டி மின் சமிக்ஞைகளை மூளையில் பதிவு செய்கிறது.