TNPSC Thervupettagam

மூளைக் காய்ச்சல் இறப்புகள்

June 16 , 2019 1863 days 564 0
  • பீகாரின் முசாபர்பூரில் கொடிய மூளைச் செயலிழப்பு நோயின் (AES - Acute Encephalitis Syndrome) காரணமாக 84 குழந்தைகள் இறந்துள்ளனர்.
  • மருத்துவர்களின் கூற்றுப்படி, மிக அதிகப்படியான வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்ட AES நோயினால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இறப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
  • உள்ளூரில் இந்த காய்ச்சல் “சம்கி” என்று அழைக்கப்படுகின்றது.
AES
  • இந்தியாவில் AES நோய் (5% - 35%) ஏற்படுவதற்கு மிக முக்கியக் காரணம் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் வைரஸாகும் (JEV - Japanese Encephalitis Virus).
  • இந்தியாவில், வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் ஏற்படுகின்ற AES நோயானது குழந்தைகள் வெறும் வயிற்றில் பழுக்காத லிட்சிப் பழங்களை சாப்பிடுவதால் ஏற்படுவதாக தொடர்புபடுத்தப் படுகின்றது.
  • AES ஏற்படுவதற்கு மிக முக்கியமான வைரஸ்களாக நிபா வைரஸ், ஜிகா வைரஸ் ஆகியவையும் கண்டறியப்பட்டுள்ளன.
  • AES நோய் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரைத் தாக்குகின்றது.
  • இது கணிசமான நோயுறுதல் மற்றும் உயிரிழப்பிற்கு வழி வகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்