TNPSC Thervupettagam

மூளையின் கணக்கிடுதல் திறனை ஒத்தச் செயற்கை நரம்பிணைவுத் தொழில் நுட்பம்

February 6 , 2023 661 days 354 0
  • பெங்களூரின் ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் (JNCASR) அறிவியலாளர்கள் குழுவானது, மூளையின் கணக்கிடுதல் திறனை ஒத்த, குறைந்த ஆற்றல் நுகர்வுடைய, அதிவேகத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
  • மூளையின் கணக்கிடுதல் திறனை ஒத்த ஒரு அமைப்பினை உருவாக்குவதற்காக, ஸ்காண்டியம் நைட்ரைடு என்ற உயர்நிலைத் தன்மை கொண்ட ஒரு குறைகடத்திப் பொருளை இக்குழு பயன்படுத்தியுள்ளது.
  • பாரம்பரியக் கணினிகளானது, தனியாக அமைந்த நினைவகச் சேமிப்பு மற்றும் செயலாக்க அலகுகளைக் கொண்டுள்ளன.
  • செயல்பாட்டின் போது இந்த அலகுகளுக்கு இடையில் தரவை மாற்றுவதற்கு அந்தக் கணினிகள் அதிகளவிலான ஆற்றலையும் நேரத்தையும் எடுத்துக் கொள்கின்றன.
  • இதற்கு நேர்மாறாக, மனித மூளையில் உள்ள சினாப்ஸ் (இரண்டு நியூரான்களுக்கு இடையிலான சந்திப்பு) ஆனது ஒரு செயலாக்க மற்றும் நினைவகச் சேமிப்புச் சாதனமாக செயல்படுகிறது.
  • இதுவே சிறியதாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் உள்ள ஒரு சிறந்த உயிரியல் கணினியாக விளங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்