TNPSC Thervupettagam

மூளையை உண்ணும் அமீபா நோய்

January 11 , 2023 558 days 390 0
  • தென் கொரிய நாடானது, நாட்டில் நெக்லேரியா ஃபவ்லேரி அல்லது "மூளை உண்ணும் அமீபாவின்" முதல் நோய்த் தொற்று பதிவானதை உறுதி செய்துள்ளது.
  • நெக்லேரியா என்பது ஓர் அமீபா மற்றும் ஒரு செல் உயிரினம் என்பதோடு, இது இந்த வகை இனங்களில் காணப்படும் இத்தகைய ஒரே வகையாகும்.
  • இது முதன்முதலில் 1965 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப் பட்டது.
  • இது பொதுவாக வெந்நீர் ஊற்றுகள், ஆறுகள் மற்றும் ஏரிகள் போன்ற சூடான நன்னீர் வாழிடங்களில் காணப்படுகிறது.
  • அமீபா மூக்கு வழியாக மனித உடலில் நுழைந்து பின்னர் மூளை வரை பரவுகிறது.
  • நெக்லேரியா ஃபவ்லேரி மூளைக்குச் சென்றவுடன், அது மூளை திசுக்களை அழித்து, முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) எனப்படும் ஆபத்தான தொற்று நோயை ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்