உடல் உறுப்புகள் செயலிழந்தவர்களின் மூளை உண்டாக்கும் சமிக்ஞைகளை, முன்பை விட அதிக வேகத்தில் சொற்களாக மாற்றும் கருவியை அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இது மோசமான ஒரு முடக்குவாதத்தினைக் கொண்டுள்ளவர்களில் தகவல் தொடர்பை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கியப் படிநிலையாகும்.
இந்தச் சாதனங்கள் மூளையின் செயல்பாட்டை வேகமாகவும் துல்லியமாகவும் சொற்களாக மாற்றும் திறன் கொண்டவை மற்றும் ஏற்கனவே உள்ள தொழில் நுட்பங்களை விட பெரிய அளவிலான சொற்களஞ்சியத்தை உள்ளடக்கியவை.
மூளைத் தண்டு முடக்குவாதம் அல்லது அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் உள்ளிட்ட பல்வேறு நரம்பியல் கோளாறுகள் உள்ளவர்களுக்கு, தசைகள் செயல் இழப்பதால் அவர்களுக்கு அடிக்கடி பேச்சு இழப்பு ஏற்படுவதால் அந்த நிலையை எதிர் கொள்ள இது உதவும்.