மூளை மின்னலை வரைவு நுட்பத்தின் 100 ஆண்டுகள் நிறைவு (EEG)
July 20 , 2024 126 days 225 0
மனித மூளை பற்றிய தகவல்களை அறிய உதவுகிற EEG (மூளை மின்னலை வரைவு) என்பது இயற்பியல் மற்றும் நரம்பணுவியலின் ஒரு சிறந்த அம்சமாகும்.
1875 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் மருத்துவர் ரிச்சர்ட் கேட்டன் குரங்குகள் மற்றும் முயல்களின் மூளையில் மின்சாரம் செயல்படுவதற்கான பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டார்.
1912 ஆம் ஆண்டில், விளாடிமிர் பிராவ்டிச்-நெமின்ஸ்கி ஒரு நாயின் மூளையின் மூளை மின்னலை வரைவினை எடுத்ததன் மூலம் பாலூட்டி இனத்தில் எடுக்கப்பட்ட ஒரு EEG வரைவினை உருவாக்கினார்.
அவருக்குப் பிறகு 1924 ஆம் ஆண்டில் ஹான்ஸ் பெர்கர் என்பவர் மனிதர்களில் இந்த வரைவினை எடுத்தார்.
EEG என்பது மூளை மின்னலை வரைவினைக் குறிக்கிறது என்ற நிலையில் இதில் ‘எலக்ட்ரோ’ என்பது மின்சாரம் தொடர்பானது.
EEG ஆனது மூளையில் நியூரான்களால் உருவாகும் மின்னியல் செயல்பாட்டை அளவிடுகிறது.
மூளையில் விரைவான மின் செயல்பாட்டை மில்லி விநாடிகளின் அளவில் கண்காணிப்பதில் மற்ற கண்டறியும் சாதனங்களை விட இது சிறந்ததாக உள்ளது.