புதைபடிம ஆராய்ச்சியாளர்கள், 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்ட ஒரு கடற்குடுவையின் (ட்யூனிகேட்டுகள்) புதைபடிவத்தினைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த ‘ட்யூனிகேட்’ புதைபடிவமானது, மென்மையான திசுக்களைக் கொண்ட, கெடாத வகையிலான இத்தகைய முதல் கண்டுபிடிப்பைக் குறிப்பதோடு இது அதன் பல்வேறு வகைகளில் மிகப் பழமையானது என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.
தற்போது ஒவ்வொருப் பெருங்கடல் வாழ்விடங்களிலும் ஏறக்குறைய 3000 வகையான ட்யூனிகேட் காணப் படுகின்றன.
ட்யூனிகேட்டுகள் மீன், பாலூட்டிகள் மற்றும் மனிதர்களையும் உள்ளடக்கிய பல்வேறு முதுகெலும்புயிரிகளுடன் நெருங்கியத் தொடர்புடையவை ஆகும்.