ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஆனது, "மெகாசில்லா" என்ற புதுமையான கட்டமைப்பைப் பயன்படுத்தி தனது ஸ்டார்ஷிப் ஏவு கலத்தினைத் தரையிறக்கியுள்ளது.
மிகப்பெரிய இயந்திர கட்டமைப்புகளுடன் கூடிய இந்த உயரமான அமைப்பு ஆனது, ஏவு கல மீட்பு முறைகளை மாற்றியமைத்துள்ளது.
மெகாசில்லா என்பது அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸ் பகுதியில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்பேஸ் தளத்தில் உள்ள மிகவும் பெரிய 400-அடி ஏவு கலப் பற்றுதலுக்கான கட்டமைப்பின் புனைப் பெயர் ஆகும்.
இந்த இயந்திரப் பற்று அமைப்புகள், அதி எடை கொண்ட உந்துக் கருவிகள் பூமிக்குத் திரும்பும் போது நடுவானில் அவற்றை பற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வழக்கமானத் தரையிறங்கும் நுட்பங்களுடன் ஒப்பிடச் செய்கையில் இந்தப் புதிய ஏவு கல மீட்பு முறையானது மிகவும் திறம் மிக்கதாகவும், மீண்டும் நன்கு பயன்படுத்தக் கூடியதாகவும் உள்ளது.