ஆஸ்திரேலியாவில் மெகாமோனோடோன்டியம் மெக்லஸ்கி என்ற பெரிய சிலந்தியின் புதைபடிவத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நாட்டில் காணப்படும் சில சிலந்திப் படிமங்களில் இதுவும் ஒன்று ஆகும்.
மேலும், இது உலகில் கிடைத்த பாரிசெளிடே குடும்பத்தைச் சேர்ந்த சிலந்தி இனத்தின் முதல் படிமமாகும்.
இந்தப் புதைபடிவமானது சிலந்தி இனங்களின் அழிவைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குவதோடு, ஆஸ்திரேலியாவின் கடந்த காலத்தைப் புரிந்து கொள்வதில் உள்ள இடைவெளிகளை நிரப்புகிறது.
அந்தக் கண்டம் வறண்டதாக மாறியதால் இந்த சிலந்தி இனம் அழிந்துவிட்டதாக நம்பப் படுகிறது.
மெகாமோனோடோன்டியம் மெக்லஸ்கி சிலந்தியின் உடல் நீளத்தில் 23.31 மில்லி மீட்டர் கொண்டது.
இது உலகளவில் கண்டறியப்பட்ட இரண்டாவது பெரிய சிலந்தி புதைபடிவமாகும்.