செயலிழப்புச் செய்யப்பட்ட இந்திய-பிரெஞ்சு வானிலை செயற்கைக்கோள், மெகா-ட்ரோபிக்ஸ்-1 (MT-1) ஆனது பூமியின் வளிமண்டலத்திற்குக் கொண்டு வரப்பட்டு அது பாதுகாப்பான முறையில் சிதைக்கப்பட்டது.
மார்ச் 07 ஆம் தேதியன்று வெற்றிகரமாக நடத்தப்பட்ட கட்டுப்பாட்டிற்குட்பட்ட மறு நுழைவு செயல்பாட்டினைத் தொடர்ந்து, இந்தச் சிதைவு செயல்முறையினை இஸ்ரோ மேற்கொண்டது.
இந்த வானிலை ஆய்வு செயற்கைக் கோளானது இந்தியாவின் விண்வெளி நிறுவனம் இஸ்ரோ மற்றும் பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான CNES ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக, 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்பட்டது.