மெக்கின்சி சுகாதார நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, பணியிடச் சோர்வு மதிப்பீட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் இந்த மதிப்பீட்டில் பங்கேற்றவர்களில் 59 சதவீதத்தினர் அதிகபட்சமாக பணியிடச் சோர்வு அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூன் நாட்டில், 9% என்ற மிகக் குறைந்த விகிதத்திலான பணியிடச் சோர்வு அறிகுறிகள் பதிவாகியுள்ளது.
உலக சராசரி பணியிடச் சோர்வு அறிகுறிகள் 20% ஆகும். ஆனால் அறிவாற்றல், சோர்வு மற்றும் உணர்ச்சிக் குறைபாடு தொடர்பான மதிப்பீடுகள் வேறுபட்டுள்ளன.
இந்தியப் பணியாளர்கள் மத்தியில் பதிவான பணியிடச் சோர்வு விகிதம் 62% ஆகவும், அதைத் தொடர்ந்து ஜப்பான் (61%) இடம் பெற்றுள்ளதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் 22% என்ற விகிதத்தில் குறைவான பணியிட சோர்வு பதிவாகி உள்ளது.
மெக்கின்சி சுகாதார நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் ஊழியர்களின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தில் துருக்கிக்கு அடுத்தப்படியாக இந்தியா 2வது இடத்தில் உள்ளது.