TNPSC Thervupettagam

மெக்சிகோ, கனடா மற்றும் சீனா மீதான அமெரிக்க வரிகள்

February 5 , 2025 18 days 65 0
  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடா மற்றும் மெக்சிகோ ஆகியவற்றிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு சுமார் 25 சதவீதமும் மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீதமும் வரிகள் விதித்துள்ளார்.
  • 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்தப் பொருட்களின் மதிப்பு சுமார் 900 பில்லியன் டாலர் ஆகும்.
  • மெக்சிகோ மற்றும் கனடா ஆகியவை அமெரிக்க நாட்டின் வேளாண் இறக்குமதியில் குறிப்பிடத் தக்கப் பங்கைக் கொண்டுள்ளன.
  • கனடா நாட்டுப் பொருட்களின் ஏற்றுமதியில் சுமார் 80% ஆனது, அமெரிக்காவிற்குச் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதோடு இதன் மதிப்பு சுமார் 410 பில்லியன் டாலர் ஆகும்.
  • அமெரிக்காவிற்கான மெக்சிகோவின் ஏற்றுமதியானது உலக நாடுகளுக்கு விற்கப் பட்ட பொருட்களில் 84% ஆகும்.
  • மெக்சிகோ ஆனது, 2023 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் காய்கறி இறக்குமதியில் 63 சதவீதமும் அமெரிக்க நாட்டின் பழங்கள் மற்றும் உலர் பழங்களின் இறக்குமதியில் சுமார் பாதிப் பங்கினையும் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்