இந்த ஆண்டில் மெக்சிகோ வளைகுடாவில் உள்ள கடல்சார் “உயிரில்லாப் பகுதி” மிகப்பெரிய உயிரில்லாப் பகுதிகளில் ஒன்று என வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது 8000 சதுர மைல்களுக்கு மேல் பரவும் என்று ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இது மீன் பிடித்தல், கடல் வளங்கள் ஆகியவற்றைக் கடுமையாகப் பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
உயிரில்லாப் பகுதிகள் என்பது உலகில் உள்ள கடல்கள் மற்றும் மிகப்பெரிய ஏரிகள் ஆகியவற்றில் மிகக் குறைந்த அளவு ஆக்ஸிஜன் உள்ள பகுதிகளாகும்.
இது மனித நடவடிக்கைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய இதர காரணிகளிலிருந்து ஏற்படும் அதிகப்படியான ஊட்டச்சத்து மாசுபாட்டினால் (நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ்) ஏற்படுகின்றது.
இது கடலுக்கு அடியில் மற்றும் அதன் அருகில் உயிர் வாழும் கடல்சார் உயிரினங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனின் அளவைக் குறைக்கின்றது.
மிஸ்ஸிஸிப்பி நதி மற்றும் அதன் அதிகப்படியான ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் மெக்சிகோ வளைகுடாவின் வளர்ந்து வரும் உயிரில்லாப் பகுதிக்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகின்றன.