TNPSC Thervupettagam

மெத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளில் இயங்கும் முதல் பேருந்துகள்

March 19 , 2023 489 days 255 0
  • பெங்களூரு பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (BMTC) ஆனது முதல் முறையாக மெத்தனால் கலந்த எரிபொருளைப் பயன்படுத்தி அதன் சில நகரப் பேருந்துகளை இயக்கத் தொடங்கியுள்ளது.
  • இந்தப் பேருந்துகளானது சோதனை அடிப்படையில் இயக்கப்படும்.
  • இந்தப் பேருந்துகள் ஆனது 15% மெத்தனால் கலந்த எரிபொருளில் இயக்கப் படுகின்றன.
  • முழுவதும் மெத்தனால் (M100) எரிபொருளில் இயங்கும் ஒரு சரக்குந்தும் அறிமுகப் படுத்தப் பட்டது.
  • பெட்ரோலில் 15% மெத்தனாலை கலப்பதால் பெட்ரோல்/கச்சா எண்ணெய் இறக்குமதியில் குறைந்தது 15% குறைக்கப்படும்.
  • மேலும், இது பசுமை இல்ல வாயு உமிழ்வை 20% குறைத்து, நகர்ப்புறப் பகுதியின் காற்றின் தரத்தை மேம்படுத்தவும் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்