TNPSC Thervupettagam

மெத்தனால் கலந்த பெட்ரோல் சோதனை

May 5 , 2022 844 days 426 0
  • இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமானது அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் M15 பெட்ரோலைச் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது.
  • M15 என்பது 15% மெத்தனால் மற்றும் 85% பெட்ரோல்  ஆகியவற்றின் கலவையாகும்.
  • இது பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை 5% முதல் 10% அளவு வரையில் குறைக்க உதவுகிறது.
  • பெட்ரோலில் 15% மெத்தனாலைக் கலப்பது, நுண்துகள்கள், NOx மற்றும் Sox ஆகிய மூலக்கூறுகளின் அடிப்படையில் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை 20% அளவு வரை குறைக்கும்.
  • மெத்தனால் என்பது CH3OH வாய்ப்பாட்டினைக் கொண்ட ஒரு திரவ இரசாயனமாகும்.
  • இது ஒரு மிதமான, ஆவியாகும் தன்மை கொண்ட, நிறமற்ற மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய திரவமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்