புனேவில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி நிறுவனமானது மெத்தனோட்ரோபிக் பாக்டீரியாவின் 45 மரபணுக் கூறுகளைப் பிரித்தெடுத்துள்ளது.
இந்த பாக்டீரியாக்கள் அரிசி ஆலைகளில் மீத்தேன் உமிழ்வைக் குறைக்கும் திறன் கொண்டவையாகும்.
இந்த மரபணுக் கூறு பிரித்தெடுப்பைத் தவிர, விஞ்ஞானிகள் மெத்தனோட்ரோபிக் கலாச்சாரத்தையும் உருவாக்கியுள்ளனர்.
பிரித்தெடுக்கப்பட்ட இந்த பாக்டீரியாக்கள் தெற்கு மற்றும் மேற்கு இந்தியாவைச் சேர்ந்தவையாகும்.
மெத்தனோட்ரோப்கள் உயிர் – தடுப்பு மருந்துகளாகவும் பயன்படுத்தப் படுகின்றன.
உயிர் – தடுப்பு மருந்து என்பது பாக்டீரியா, ஆல்கா அல்லது பூஞ்சைகளின் மரபணுக் கூறாகும். இந்த பாக்டீரியாக்கள் வளிமண்டலத்திலிருந்து நைட்ரஜனை எடுத்து தாவரங்களுக்குத் தேவையான நைட்ரேட்டுகளைத் தயாரிக்கின்றன.
கார்பன்-டை ஆக்சைடு வாயுவிற்குப் பிறகு, மீத்தேன் வாயு இரண்டாவது மிகப்பெரிய பசுமை இல்ல வாயு பங்களிப்பாளராகும்.
விவசாயத்தில் மெத்தனோட்ரோபிக் பாக்டீரியாக்களின் பயன்பாட்டின் மூலம், மீத்தேன் வாயுவின் வெளியேற்றமானது வெகுவாகக் குறைக்கப்பட இருக்கின்றது.