மென் பானங்களுக்கான சர்க்கரை வரி (soft drinks sugar tax) அல்லது தீமை வரி (sin tax) அல்லது சர்க்கரை வரி (sugar tax) என்றழைக்கப்படும் மென்குளிர்பான தொழிற்சாலை வரிவிதிப்பானது (Soft Drinks Industry Levy) இங்கிலாந்தில் அமல்பாட்டிற்கு வந்துள்ளது.
சர்க்கரை சார்ந்த நோய்கள் (sugar related disease) மற்றும் உடல் பருமனை (obesity) தடுப்பதற்கான அரசினுடைய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சர்க்கரை வரிவிதிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சர்க்கரை வரி விதிப்பின் அறிமுகத்தின் மூலம் இதேபோலான கொழுப்பு வரிகளை (fat taxes) அறிமுகப்படுத்தியுள்ள மெக்ஸிகோ, பிரான்ஸ், நார்வே ஆகிய நாடுகள் அடங்கிய குழுவில் இங்கிலாந்து இணைந்துள்ளது.
இங்கிலாந்தில் 2016 ஆம் ஆண்டு மென்பான தொழிற்சாலை வரிவிதிப்பு அறிவிக்கப்பட்டது.
மென்குளிர்பானங்களில் உள்ள சர்க்கரையினுடைய அளவின் அடிப்படையில் அவற்றின் மீது வரி விதிக்கப்படும்.
இந்த வகையில் இங்கிலாந்தில் உள்ள பெரும்பான்மையான குளிர் பானங்கள் உயர்ந்த பட்ச அளவிலான வரிகளை கட்டி வருகின்றன.