சீர் மிகு நகரங்கள் திட்டத்தின் (SCM) கீழ் மெய்நிகர் கற்றல் வகுப்பறைகள் அறிமுகம் ஆனது 2015-16 முதல் 2023-24 ஆம் ஆண்டு வரை சுமார் 19 நகரங்களில் ஒட்டு மொத்த மாணாக்கர் சேர்க்கையில் 22% அதிகரிப்பிற்கு வழிவகுத்தது.
71 நகரங்களில் உள்ள 2,398 அரசுப் பள்ளிகளில் 9,433 மெய்நிகர் கற்றல் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் அதிக எண்ணிக்கையிலான மெய்நிகர் கற்றல் வகுப்பறைத் திட்டங்கள் (80) அமல்படுத்தப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து இராஜஸ்தான் (53) உள்ளதோடு தமிழகத்தில் 23 மற்றும் டெல்லி 12 திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
மேற்கு வங்காளம் ஆனது, இரண்டு அமலாக்கங்களுடன், பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது.
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி, SCM திட்டத்தின் கீழ் 91% திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
SCM திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டில், ‘SAAR’ (நடவடிக்கை மற்றும் ஆராய்ச்சியை நோக்கிய சீர் மிகு நகரங்கள் மற்றும் கல்வித் துறை) என்ற ஒரு தளமானது அறிமுகப் படுத்தப் பட்டது.