TNPSC Thervupettagam

மெர்சி கார்ப்ஸ் அமைப்பின் அறிக்கை

October 30 , 2023 391 days 276 0
  • இந்த அறிக்கையானது லெபனான், சிரியா, ஏமன், ஜோர்டான், ஈராக் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பகுதிகள் (மேற்குக் கரை மற்றும் காசா) அத்துடன் வட ஆப்பிரிக்க நாடுகளான துனிசியா மற்றும் எகிப்து ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகிறது.
  • மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவின் பல நாடுகள் கடுமையான உணவு நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன.
  • இது முதன்மையாக அந்நாட்டு மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க இயலாமை மற்றும் கருங்கடல் பகுதியில் நிலவும் மோதல்கள் மற்றும் வர்த்தக இடையூறுகள் ஆகியவற்றின் பாதகமான விளைவுகளுக்கு உட்படுதல் ஆகியவற்றினால் ஏற்படுகின்றது.
  • மனிதாபிமானம் சார்ந்த நிதியின் அளவு குறைந்து வருவதால் இந்த நிலைமை மேலும் மோசமடைகிறது.
  • உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தானிய ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • உள்நாட்டு விநியோகத்தைப் பாதுகாப்பதற்காக இந்திய நாடும் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அரிசி ஏற்றுமதியைத் தடை செய்ததாக இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
  • இந்த அதிர்ச்சிகளின் ஒருங்கிணைந்த தாக்கம் ஆனது மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவின் (MENA) பல பகுதியில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான உணவு சார் பணவீக்கத்தைத் தூண்டக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்