2017 ஆம் ஆண்டிற்கான மெல்பர்ண் மெர்சர் உலகளாவிய ஓய்வூதியக் குறியீட்டில் தொடர்ந்து ஆறாவது வருடமாக டென்மார்க் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 30 நாடுகளைக் கொண்ட இந்த தரவரிசையில் இந்தியா 28 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஒட்டுமொத்த குறியீட்டு மதிப்பில் (இந்தியா) சென்ற ஆண்டு 4 புள்ளிகளைப் பெற்றிருந்தது. இவ்வாண்டின் அறிக்கையில் இது 44.9 ஆக உயர்ந்துள்ளது. போலந்து, ஜெர்மனி, பிரான்சு, ஜப்பான், இத்தாலி, ஆஸ்திரியா, பிரேசில், சீனா மற்றும் அர்ஜென்டீனா நாடுகளை விட இந்தியாவின் ஓய்வூதிய திட்டம் நிலைத்தன்மையுடன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மெல்பர்ன் மெர்சர் உலகளாவிய ஓய்வூதியக் குறியீடானது, உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் பணி ஓய்வு பெற்றபின் வருமானம் அளிக்கும் திட்டங்களை ஒப்பிட்டு தரவரிசைப் படுத்துகிறது. தரவரிசைக்கு கணக்கில் கொள்ளப்படும் அளவீடுகள்:
நிறைவுத் தன்மை
நிலைத்தன்மை
நேர்மைத் தன்மை
இந்தக் குறியீடு அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 27 நாடுகளின் ஓய்வூதிய வருமான திட்டங்களை மதிப்பிட்டு வந்தது. இந்த வருடம் கொலம்பியா, நியூசிலாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகள் இணைக்கப்பட்டு 30 நாடுகள் இந்த மதிப்பீட்டில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.