TNPSC Thervupettagam

மெல்லிய மரபல்லி – கோவா

September 14 , 2021 1042 days 516 0
  • ஹெமிபிலோடாக்டைலஸ் கோயென்சிஸ் (Hemiphyllodactylus goaensis) எனும் ஒரு சிறிய மெல்லிய மரபல்லி இனமானது கோவா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் வடக்குப் பகுதியில் புதியதாக கண்டறியப்பட்ட ஒரு இனமாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  • இது “A New Species of genus Hemiphyllodactylus Bleeker, 1860” என்ற தலைப்பில் zootaxa என்ற ஒரு விலங்கியல் இதழில் வெளியிடப்பட்டது.
  • இந்த மெல்லிய மரபல்லி இனமானது இந்தியாவின் மிகச்சிறிய இனங்களுள் ஒன்றாகும்.
  • இது மனிதனின் கட்டை விரலில் அமரக் கூடிய  வகையில் 32 மி.மீ. அளவிலானதாகும்.
  • ஹெமிபிலோடாக்டைலஸ் கோயென்சிஸ் இனமானது இந்த இனத்தின் 8வது இந்திய இனமும் உலகளவில் 44வது இனமும் ஆகும்.
  • கோவா பல்கலைக்கழகத்தில் விவரிக்கப்பட்ட முதல் விலங்கினமும் இதுவேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்