TNPSC Thervupettagam

மேகாலயாவின் ஒளிரும் காளான்கள்

November 27 , 2020 1464 days 641 0
  • வடகிழக்கு இந்தியாவின் காடுகளில் மேற்கொள்ளப் பட்ட காளான் ஆவணமாக்கல் என்ற ஒரு திட்டத்தின் கீழ் பயோலூமினசென்ட் அல்லது ஒளி உமிழும் வகைக் காளான்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
  • இந்தப் புது வகை காளான், முதன்முதலில் மேகாலயாவின் கிழக்கு காசி மலைகள் மாவட்டத்தில் மவ்லின்நொங்கில் ஒரு நீரோடைக்கு அருகிலும் பின்னர் மேற்கு ஜெயந்தியா மலைகள் மாவட்டத்தில் கிராங் ஷூரி என்ற பகுதியிலும் காணப்பட்டது.
  • இது இப்போது உலகில் அறியப்பட்ட 97 ஒளி உமிழும் பூஞ்சை வகைகளில் ஒன்றாகும்.
  • ஒரு உயிரினத்தால் வெளிப்படும் ஒளியின் நிறம் அதன் வேதியியல் பண்புகளைப் பொறுத்தது ஆகும்.
  • பூஞ்சையின் ஒளி உமிழ்விற்குக்  காரணம் லூசிஃபெரேஸ் என்ற ஒரு நொதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்