- மத்திய நிதி அமைச்சகமானது மேம்பாடு மற்றும் புனரமைப்பிற்கான சர்வதேச வங்கியுடன் (International Bank for Reconstruction and Development-IBRD) மேகாலயா சமுதாய வழிநடத்து நிலப்பரப்பு மேலாண்மைத் திட்டத்திற்காக (Meghalaya Community – Led Landscapes Management Project-MCLLMP) 48 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தந்தில் கையெழுத்திட்டுள்ளது.
- 2023-ல் மேகலாயாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலப்பரப்புகளில் சமுதாய – வழிநடத்து நிலப்பரப்பு மேலாண்மையை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
- இத்திட்டமானது மூன்று கூறுகளை கொண்டது.
- திட்ட மேலாண்மை மற்றும் ஆளுகை
- சமுதாய-வழிநடத்து நிலப்பரப்பு திட்டமிடல் மற்றும் அமல்படுத்துதல்.
- இயற்கை மூல ஆதார மேலாண்மைக்காக திறன்கள் மற்றும் திட்ட அறிவினை வலுப்படுத்துதல்.
- இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சீர்கேடு அடைந்த மற்றும் மிகவும் அதிக அளவில் சீர்கேடடைந்த நிலப்பரப்புகளின் புனரமைப்பானது உள்ளூர் சமுதாயங்களுக்கு இந்த நிலப்பரப்புகளில் கிடைக்கக்கூடிய நீரின் அளவை அதிகரிக்கும்.
- இத்திட்டம் மண்ணின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும். அவை அதற்கு பதிலீடாக உள்ளூர் சமுதாயங்களின் வருமானத்தைப் பெருக்கி, வறுமையை குறைக்கும்.
மேம்பாடு மற்றும் புனரமைப்பிற்கான சர்வதேச வங்கி
- மேம்பாடு மற்றும் புனரமைப்பிற்கான சர்வதேச வங்கியானது நடுத்தர வருமானமுடைய வளரும் நாடுகளுக்கு கடனளிக்கும் ஓர் சர்வதேச நிதியியல் நிறுவனமாகும்.
- இது உலக வங்கி குழுமத்தினில் உள்ளடங்கியுள்ள ஐந்து நிறுவனங்களில் முதன்மையான முதல் நிறுவனமாகும்.
- இரண்டாம் உலகப் போரால் பாழடைந்த ஐரோப்பிய நாடுகளின் புனரமைப்புக்கு நிதி வழங்கும் நோக்கோடு 1944-ஆம் ஆண்டு மேம்பாடு மற்றும் புனரமைப்பிற்கான சர்வதேச வங்கி உருவாக்கப்பட்டது.