TNPSC Thervupettagam

மேகாலயா மற்றும் உலக உணவுத் திட்டம்

November 29 , 2021 1000 days 537 0
  • வடகிழக்குப் பகுதியில் மேகாலய அரசு, ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்ட அமைப்புடனான முதலாவது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தமானது அந்த மாநிலத்தில் பொது விநியோக வழங்கீட்டு முறையைச் சீரமைத்து வலுப்படுத்துவதற்கானதாகும்.
  • இந்தக் கூட்டிணைவானது, 2வது நிலையான மேம்பாட்டு இலக்கான பசியற்ற நிலையின்மை என்ற நிலையை அடைவதை நோக்கி உலக உணவுத் திட்ட அமைப்பின் அதிகாரிகளும் மாநில அரசும் இணைந்து செயல்பட உதவும்.
  • உணவு, பொருள் வழங்கீடு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறையினால், “ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக, ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் இந்த ஒப்பந்தமானது கையெழுத்தானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்