மேக்னடிக் மஹாராஷ்டிரா கூடுகை மாநாடு - 2018 (Magnetic Maharashtra Convergence Summit) என்ற மாநாட்டை மும்பையில் பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.
“இந்தியாவில் தயாரிப்போம்“ (Make in India) திட்டத்தின் வழியிலான மகாராஷ்டிராவின் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இதுவாகும்.
மாநிலத்திற்கு பத்து இலட்சம் கோடி முதலீடுகளை கொண்டு வருவதற்காக இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.
மேலும் இம்மாநாட்டில் மகாராஷ்டிராவில் நான்காவது தொழிற்புரட்சிக்காக (Industrial Revolution) இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த தொழிற்துறை பகுதியை ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு, நீடித்த தன்மை, உள்கட்டமைப்பு, எதிர்கால தொழிற்துறை ஆகிய 4 முக்கிய தூண்களினை கருத்துருவாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் (FDI - Foreign direct Investment) 51% சதவீதம் மகாராஷ்டிராவில் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.