TNPSC Thervupettagam

மேக்னடிக் மகாராஷ்டிரா

February 18 , 2018 2343 days 772 0
  • மேக்னடிக் மஹாராஷ்டிரா கூடுகை மாநாடு - 2018 (Magnetic Maharashtra Convergence Summit) என்ற மாநாட்டை மும்பையில் பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.
  • “இந்தியாவில் தயாரிப்போம்“ (Make in India) திட்டத்தின் வழியிலான மகாராஷ்டிராவின் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இதுவாகும்.
  • மாநிலத்திற்கு பத்து இலட்சம் கோடி முதலீடுகளை கொண்டு வருவதற்காக இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.
  • மேலும் இம்மாநாட்டில் மகாராஷ்டிராவில் நான்காவது தொழிற்புரட்சிக்காக (Industrial Revolution) இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த தொழிற்துறை பகுதியை ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • வேலை வாய்ப்பு, நீடித்த தன்மை, உள்கட்டமைப்பு, எதிர்கால தொழிற்துறை ஆகிய 4 முக்கிய தூண்களினை கருத்துருவாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
  • நாட்டின் மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் (FDI - Foreign direct Investment) 51% சதவீதம் மகாராஷ்டிராவில் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்